search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மடோனா செபஸ்டியன்"

    மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. #Maniratnam
    இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்று வெளியிடை மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டான செக்க சிவந்த வானம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். இந்த நிறுவனத்தின் 19 - வது படைப்பாக "வானம் கொட்டட்டும்" என்ற புதிய படம் உருவாக இருக்கிறது.

    இதில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவர் முதன்முறையாக மணிரத்னம் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள்.

     

    மணிரத்னத்தின் உதவியாளரான இவர் ஏற்கனவே "படை வீரன்" என்ற படத்தை இயக்கியுள்ளார். அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். "96" புகழ் கோவிந்த வசந்தா இசை அமைக்கிறார். பிரீத்தா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்குகிறது. 
    பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமான மடோனா செபஸ்டியன் அடுத்ததாக, கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் என்று கூறியிருக்கிறார். #MadonnaSebastian
    சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்க இருக்கிறார். இவர் இதற்குமுன் ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கி இருந்தார்.

    தற்போது மீண்டும் சசிகுமாரை கதாநாயகனாக கொண்டு ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், தற்போது மடோனா செபஸ்டியன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    மடோனா பாவாடை தாவணி அணிந்து அசல் கிராமத்துப் பெண்ணாகவே இப்படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜுங்கா ஆகிய படங்களில் ஏற்கெனவே மடோனா கிராமத்து தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பிரேமம் படம் மூலம் பிரபலமான மடோனா செபஸ்டியன், முத்த காட்சிக்கு நடிக்க மறுத்ததால் 3 படங்களை இழந்தேன் என்று கூறியிருக்கிறார். #MadonaSebastian
    பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபஸ்டியன் ஜுங்கா படம் மூலம் விஜய்சேதுபதியுடன் 3வது முறை இணைந்து இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

    ஜுங்காவில் கவுரவ வேடத்தில் நடித்தது விஜய்சேதுபதிக்காகவா?

    விஜய்சேதுபதி என்மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். அதுதான் முதல் காரணம். கதையை கேட்டேன். என் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. எனவே சம்மதித்தேன். 5 நிமிடங்கள் வந்தாலும் பரவாயில்லை. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளில் நடிக்கும் அனுபவம்?

    நான் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க விரும்புவேன். எனவே மொழி பிரச்சினை இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் முன்கூட்டியே வசனங்களை வாங்கி வைத்து அதை மனப்பாடம் செய்துகொள்வேன். தமிழும் கற்றுக்கொண்டு வருகிறேன்.



    விஜய்சேதுபதி உங்களது அர்ப்பணிப்பை புகழ்கிறாரே?

    எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. அவரது பாராட்டு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. இன்னும் நன்றாக பண்ண வேண்டும் என்ற பொறுப்பு வருகிறது. ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அதில் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன்.

    எப்படி படம் தேர்வு செய்கிறீர்கள்? 

    முதலில் கதை என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்பேன். அடுத்து எனது கதாபாத்திரத்தின் தன்மை. முக்கியமாக இயக்குனரின் திறமை. இவைகளுக்கு பிறகு தான் சம்பளம் உள்ளிட்ட மற்ற வி‌ஷயங்கள்.

    காதல் அனுபவம்?

    என்னுடைய தனிப்பட்ட வி‌ஷயங்களை பேச விரும்பவில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்தால் வெளிப்படையாக அறிவிக்க தயங்க மாட்டேன்.

    நீங்கள் அணியும் உடைகள் வித்தியாசமாக இருக்கிறதே?

    நான் இதை கவனித்தது இல்லை. ஆடைகள் நமது குணத்தை பிரதிபலிக்கும். எனவே பார்த்து பார்த்துதான் தேர்வு செய்வேன்.

    அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே?

    ஆமாம். லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை. கட்டிப்பிடிக்கும் காட்சியில் முதல்முறை நடித்தபோது அம்மாவுக்கு போன் பண்ணி அழுதிருக்கிறேன். அதுபோல நடிப்பது சிரமம். நான் கூச்ச சுபாவம் கொண்டவள். பிறரிடம் பேசவே பயப்படுவேன். எனக்கு ஒரு சின்ன தங்கை இருக்கிறாள். அவளுடன் நேரம் செலவிடவே அதிகம் விரும்புவேன்.



    நடிப்பு தவிர எதில் ஆர்வம்?

    நான் அடிப்படையில் ஒரு பாடகி. சொந்தமாக ஒரு இசைக்குழு நடத்தி வருகிறேன். ஆனால் படங்களுக்கு இசை அமைக்கும் அளவுக்கு நம்பிக்கை இல்லை.

    மலையாள நடிகர் சங்கத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதே?

    நான் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. இந்த வி‌ஷயத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

    நடிகை என்றால் பொது இடங்களில் தொல்லைகள் வருமே?

    ஆமாம். நடிகைகளும் சாதாரண மனிதர்கள் தான். இதை அனைவரும் உணர வேண்டும். நான் பெண்ணியவாதி அல்ல. ஆனால் ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்படவேண்டும். தனி மனித உரிமை மிக முக்கியம்.
    மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து அடுத்ததாக கன்னட மொழி படத்தில் கால் பதிக்க இருக்கிறார் மடோனா செபஸ்டியன். #Madonna
    மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன். தமிழில் காதலும் கடந்து போகும், கவண், ப.பாண்டி ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு எனத் தொடரும் மடோனாவின் பயணம் தற்போது கன்னடத்திலும் தொடங்க உள்ளது.

    கன்னடத்தில் நடிகர் சுதீப் திரைக்கதை எழுதி நடித்த கொட்டிகொபா படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் மூன்றாம் பாகத்துக்கும் திரைக்கதை எழுதிய அவர், அந்தப் படத்தின் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    அறிமுக இயக்குனர் சிவகார்த்திக் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே தொடங்கி நடைபெற்றது. ஆனால் கதாநாயகி யார் என்பது மட்டும் முடிவாகாமல் இருந்த நிலையில் தற்போது மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.



    இன்று செர்பியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் மடோனா கலந்துகொள்ளவிருக்கிறார். 40 நாட்கள் தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படத்தை வெளியிடபடக் குழு திட்டமிட்டுள்ளது.
    ×